உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பறவை காவடி

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பறவை காவடி

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், பறவை காவடி ஊர்வலம் நடந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் கடந்த 3ம் தேதி சித்திரை திருவிழா துவங்கியது. தினமும் உபயதாரர்கள் சார்பில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்திரா நகர் பகுதி மக்கள் சார்பில் அம்மன் ஊர்வலம் இந்திரா நகரில் இருந்து தந்தி மாரியம்மன் கோவில் வரை நடந்தது. இதில், கிரேன் பயன்படுத்தி அதில் இரு பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடியாக வலம் வந்தனர். மேள தாளங்கள் முழங்க ஆடல் பாடலுடன் பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !