சீலைக்காரி அம்மன் கோயிலில் பங்குனி களரி உற்சவ விழா
ADDED :182 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தில் சீலைக்காரி அம்மன் கோயில் பங்குனி களரி உற்சவ விழா நடந்தது.இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் சீலைக்காரி அம்மனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பின்பு பள்ளி அருகே காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம்,அக்னி சட்டி எடுத்து விநாயகர்,முருகன் கோயில் வழியாக முக்கிய தெருக்களில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.பின் சீலைக்காரி அம்மனுக்கு பாலபிஷேகம் நடந்தது.பொங்கல் வைத்தும்,கிடா பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர். விழாவில் முதுகுளத்தூர்,மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பலரும் கலந்து கொண்டன