சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாற்றுத் திருக்கோலம்
ADDED :185 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் திருக்கல்யாண உற்ஸவத்தில் நான்காம் நாளில் மாற்றுத் திருக்கோல வைபவம் நடந்தது. கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா ஏப்., 1ல் நடந்தது. தொடர்ந்து யாக பூஜைகள் நடக்கும் நிலையில் இன்று காலை சுந்தரராஜ பெருமாள் தாயாராகவும், சவுந்தரவல்லி தாயார் பெருமாள் ஆகவும் மாற்று திருக்கோலத்தில் இருந்தனர். நாளை காலை அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு மாலை ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பெருமாள் எழுந்தருள்கிறார். தொடர்ந்து இரவு பூ பல்லக்கில் பட்டணப்பிரவேசம் நடக்கிறது.