திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆருத்ரா உற்சவம்
ADDED :2196 days ago
காரைக்கால்.திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு, நடராஜர் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் கடந்த 10 நாட்களாக நடந்த ஆருத்ரா உற்சவம் நிறைவு பெற்றது. நிறைவு நாளை யொட்டி இன்று காலை யாக பூஜைகள் நடத்தப்பட்டு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு 16 விசேஷ தினங்களால் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின் காலை 9 மணிக்கு கோ பூஜை நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. பின் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ராஜகோபுர தீபாராதனையுடன் சுவாமிகள் 4 மாடவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.