வன்னிய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2094 days ago
புதுச்சேரி: வன்னிய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முதலியார்பேட்டையில் உள்ள வன்னிய பெருமாள் கோவிலில் மார்கழி மகோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவில் கூடாரவல்லி ஆண்டாள் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.விழாவில் அறங்காவலர் குழு கவுரவ தலைவர் பாஸ்கர் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.