உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றில் அம்மன் சிலை மீட்பு

ஆற்றில் அம்மன் சிலை மீட்பு

 தஞ்சாவூர் : தஞ்சை அருகே, கொள்ளிடம் ஆற்றில், 2 அடி உயர அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பூண்டி - செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றில், மூழ்கிய நிலையில், சிலை ஒன்று கிடப்பதை, நேற்று முன்தினம் மாலை,  அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.திருக்காட்டுப்பள்ளி போலீசார் சென்று, வி.ஏ.ஓ., வீரமணி முன்னிலையில், சிலையை வெளியே எடுத்தனர். அம்மன் கற்சிலை, 2 அடி உயரமும், முக்கால் அடி அகலம் இருந்தது.விசாரணை நடத்திய பூதலுார் தாசில்தார் சிவக்குமார்,  சிலையை அறநிலையத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்க உள்ளோம், என்றார்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !