சபரிமலையில் மகரஜோதி கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
ADDED :2133 days ago
சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகரவிளக்கை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது. தீபாராதனை முடிந்த 6.50 மணியக்கு மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது. ஜோதியை கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலைஇறங்கினர். ஜன., 20 இரவு, 10:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஜன., 21- காலை, 7:00 மணிக்கு நடை அடைக்கப்படும்