திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், நந்திகேஸ்வர பெருமானுக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கடஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரன பூஜை, மகா அபிஷேகம், காய்கறி, தட்சணங்களால் நந்திகேஸ்வர பெருமான் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டார். உற்சவமூர்த்தி சிவானந்த வல்லி சமேத சந்திரசேகரர் நந்திகேஸ்வரர் முன்பாக எழுந்தருள, நந்திகேஸ்வர பெருமானுக்கு ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. சுவாமி முக்கிய வீதி வழியாக வலம் வந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.