மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
2082 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
2082 days ago
ஊத்துக்கோட்டை:மஹா கால பைரவர் கோவிலில், இந்த ஆண்டின் முதல் தேய்பிறை அஷ்டமி விழா, நாளை, நடைபெற உள்ளது.ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மஹா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில், சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.இந்தாண்டின், முதல் தேய்பிறை அஷ்டமி விழா, நாளை, நடைபெற உள்ளது. காலை, 10:00 மணிக்கு, மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும்.பின், மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை காட்டப்படும். இந்த ஆண்டின் முதல் தேய்பிறை அஷ்டமி விழா என்பது குறிப்பிடத்தக்கது.
2082 days ago
2082 days ago