மகரஜோதி தரிசனம்
ADDED :2086 days ago
திம்மராஜம்பேட்டை:ராமலிங்கேஸ்வரர் கோவிலில், மகர ஜோதி தரிசனம் வெகு விமரிசையாக நடந்தது.
வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், அய்யப்பனுக்கு தனி சன்னிதி உள்ளது. பொங்கல் தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, அய்யப்ப பக்தர்கள், பக்தி பாடல்களை பாடினர். இரவு, 7:00 மணிக்கு, மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது.