நெல்லையப்பர் கோயில் பிரசாதத்திற்கு தரச் சான்றிதழ்
ADDED :2083 days ago
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் படைக்கும் பிரசாதத்திற்கு மத்திய அரசின் போக் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பினர், கோயில் பிரசாதங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் போக் தரச்சான்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோயிலில் படைக்கப்படும் அன்னம், பிரசாதம் ஆகியவை ஆய்வு செய்து போக் அங்கீகார சான்று வழங்கப் பட்டுள்ளது.கோயில் செயல்அலுவலர் யக்ஞநாராயணன் கூறுகையில், கோயில் பிரசாதங்கள், அன்னதானம் ஆகியவற்றில் மாதிரி எடுத்து தரத்தை சோதித்தனர். அதன்பின் தரச்சான்று வழங்கியுள்ளனர் என்றார். குடியரசு தின விழாவில் இந்த சான்றிதழ் கலெக்டரால் வழங்கப்படுகிறது.