உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரியூர் கோவில் குண்டத்தில் குவிந்த ஒன்றரை டன் உப்பு

பாரியூர் கோவில் குண்டத்தில் குவிந்த ஒன்றரை டன் உப்பு

கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டத்தில், ஒன்றரை டன் உப்பு குவிந்தது. கோபி அருகே, ரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், தீ மிதி விழா, கடந்த, 9ல் நடந்தது.

விழா முடிந்தது முதல், குண்டத்தின் மீது பக்தர்கள், மிளகு கலந்த உப்புக்கற்களை தூவி வழிபட்டு செல்கின்றனர். இதனால், 60 அடி குண்டத்தில் இதுவரை ஒன்றரை டன் உப்புக்கல் குவிந்துள்ளது. கடந்தாண்டில் போதிய பருவமழை பெய்து, நீர் நிலைகள் நிரம்பி, விவசாயம் செழித்தது. இதனால் நடப்பாண்டு குண்டம் திருவிழாவில், ஏராளமான விவசாயிகள் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இதனால் திருக்குண்டத்தில், உப்பு கொட்டி வழிபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !