உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரகிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நடை அடைப்பு

சந்திரகிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நடை அடைப்பு

தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். சந்திரனின் முழுமையாக சிவப்பு நிறம் மாலை 4.34 மணி முதல் மாலை 5.33 மணி வரை தோன்றும்.பொதுவாக சூரியகிரகணம், சந்திரகிரகணம் நாட்களில் கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கோவில்களும் காலை நேரத்தில் நடை சாத்தப்பட்டன.  தஞ்சை பெரிய கோவிலில் காலை நேர பூஜைகள் முடிந்த, பின்னர் காலை 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் கோவிலில் இருந்து வெளியேறினர். மாலையில் கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் செய்த பின்பு இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !