உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமரை கோலாரில் தரிசிக்க பக்தர்களுக்கு வாய்ப்பு

அயோத்தி ராமரை கோலாரில் தரிசிக்க பக்தர்களுக்கு வாய்ப்பு

கோலார்: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பிரமாண்ட ராமர் கோவில், 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், ராமர் கோவிலுக்கு செல்ல முடியாத, கர்நாடக பக்தர்கள் குறையை போக்கும் வகையில், துமகூரின் குப்பி தாலுகா பித்ரே கிராமத்தை சேர்ந்த, சிற்ப கலைஞர் வினய் ராம் என்பவர், அயோத்தி ராமர் கோவில் மாதிரியை உருவாக்கி உள்ளார். அயோத்தி ராமர், கோவில் கோபுரங்கள், சிற்ப வேலைப்பாடுகள், துாண்கள், கருவறை வடிவமைப்பை அப்படியே பிரதிபலித்து உள்ளார். மாநிலம் முழுதும் ராமர் கோவில் மாதிரியை எடுத்து சென்று, பக்தர்களை தரிசிக்க வைக்கிறார். கோலார் ஜெயநகர் 7வது மெயின் ரோட்டில் உள்ள, வாசவி சினேக பவனில், ராமர் கோவில் மாதிரி வைக்கப்பட்டுள்ளது. வரும் 5 ம் தேதி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 4:00 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும், இலவசமாக பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !