உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி செவ்வாய்; பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி செவ்வாய்; பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை;  புரட்டாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகபெருமானை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 


இதேபோல், புரட்டாசி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம்  சுண்டைக்கா முத்தூர் பைபாஸ் ரோடில் உள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் விபூதி காப்பு அலங்காரத்தில் மூலவர் முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !