தும்பூர் வள்ளலார் மடத்தில் அவதார திருநாள் விழா
ADDED :21 hours ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் வள்ளலார் மடத்தில் அவதார திருநாள் விழா நடந்தது.
விழாவிற்கு விழுப்புரம் சன்மார்க்க சங்க தலைவர் நீலமேக வண்ணன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஞானவேல் முன்னிலை வகித்தார். சன்மார்க்க சங்க நிர்வாகி கார்த்திகேயன் வரவேற்றார். தும்பூர் சன் மார்க்க சங்கத் தலைவர் பாபு கொடியேற்றி வைத்தார். சன்மார்க்க சங்க தலைவர்கள் ஆலம் பூண்டி கோவிந்தசாமி ,செஞ்சி தணிகாசலம், ரவிச்சந்திரன் , சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் இளங்கோ, சன்மார்க்க நிர்வாகிகள் பாண்டியன், தண்டபாணி ,மாணிக்கம் ,ஏழுமலை, கங்கை மணிமாறன், சக்திவேல், தவமணி, சீனு வாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.