உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி கருப்பண்ணசுவாமி கோயில் உற்ஸவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

சாயல்குடி கருப்பண்ணசுவாமி கோயில் உற்ஸவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

சாயல்குடி: சாயல்குடி அண்ணா நகரில் உள்ள சோனை கருப்பண்ண சுவாமி கோயிலில் இரண்டாம் ஆண்டு உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று விளக்கு பூஜை நடந்தது. நரிப்பையூர் அருகே 5 ஏக்கர் கடலில் தீர்த்தம் ஆடி வந்து, அத்தி மரத்து காளியம்மன் கோயிலில் இருந்து வேல் குத்தி அக்னிசட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் பக்தர்கள் உலா வந்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று மாலை பொங்கல் வைத்து உச்சி சாம பூஜை நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சாயல்குடி அருந்ததியர் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !