அவலுார்பேட்டையில் சிவனடியார்களுக்கு வரவேற்பு
ADDED :21 minutes ago
அவலுார்பேட்டை: திருவண்ணாமலை கோவிலுக்கு திருக்குடை உபய யாத்திரை மேற்கொண்ட சிவனடியார்களுக்கு அவலுார்பேட்டையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையிலிருந்து கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு, ஹிந்து ஆன்மிக சேவா சமிதி அறக்கட்டளை சார்பில், நிறுவனர் லிங்கேசன் தலைமையில், சிவனடியார்கள் வாகனங்களில் திருக்குடை உபய யாத்திரை பயணம் மேற்கொண்டனர். திருக்குடையுடன் திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் அவலுார்பேட்டைக்கு வந்த சிவனடியார்களுக்கு நேற்று முன்தினம் இரவு கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்குடைக்கு நடந்த சிறப்பு தீபாரதனையில் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.