வரசக்தி விநாயகர் கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு விளக்கு பூஜை
ADDED :1 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கணேச நகர் வரசக்தி விநாயகர் கோவிலில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு விளக்கு பூஜை நடந்தது.
காஞ்சிபுரம் கணேச நகரில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலில், பொன்னம்பல வாசன் பக்தஜன சபாவின் சார்பில், அய்யப்ப சுவாமிக்கு 15வது ஆண்டு விளக்கு பூஜை இன்று நடந்தது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு வரசக்தி விநாயகர் மற்றும் தும்பவனம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், தொடர்ந்து அய்யப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகமும் நடந்தது. காலை 9:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அய்யப்ப சுவாமி வீதியுலா வந்தார். இரவு 7:00 மணிக்கு விளக்கு பூஜையும், இரவு 10:30 மணிக்கு ஜோதி தரிசனமும் நடந்தன.