விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு
ADDED :21 minutes ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு செய்தனர்.
விக்கிரவாண்டி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாள் மூலவர் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து துளசி மாலை சாத்தி மகாதீப ஆராதனை நடந்தது. விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற 27 பூக்களை கொண்டு 27 முறை கொடி மரத்தை வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.