உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஆதிபராசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியில் அன்னை ஆதிபராசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் ஆதிபராசக்தி அம்மன் கோவில் கட்டப்பட்டது. இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு, திரிசூல வேல் மற்றும் ஆதிபராசக்தி அம்மன் திருஉருவ புகைப்படம் ஆகியவை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, செவ்வாடை பக்தர்களுடன், சுவாமி வேடமணிந்தவர்களின் நடனம், நாடக நிகழ்ச்சிகள் நடந்தன.

ஊர்வலம் முடிந்ததும், சுவாமியின் புகைப்படம் கருவறையில் வைக்கப்பட்டு, வேல் நடப்பட்டது. இதனையடுத்து, நேற்று காலை கோவிலுக்கு முன் யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 10.15 மணிக்கு அம்மன், வேல் மற்றும் சுவாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !