உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டையில் தீர்த்தவாரி உற்சவம்

தேவகோட்டையில் தீர்த்தவாரி உற்சவம்

தேவகோட்டை மணிமுத்தாறு ஆற்றில் ஐப்பசி மாத நிறைவு நாள் கடமுழுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

தேவகோட்டையில் உள்ள சுவாமிகள் மணிமுத்தாறில் ஐப்பசி முதல் நாள் முதல் தீர்த்தவாரியும் கடைசி நாள் கடமுழுக்கு தீர்த்தவாரியும் கொடுப்பது வழக்கம். அதன் படி நேற்று ஐப்பசி மாத கடைசி நாளை முன்னிட்டு நேற்று மதியம் தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நித்திய கல்யாணி கைலாசநாதர், கோதண்டராமர், ரங்கநாத பெருமாள், கிருஷ்ணர், நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து சைவ பிரிவு சிவபெருமான், விநாயகர் சார்பில் அட்சரத்தேவர், வைணவ பெருமாள் சார்பில் சக்கரதாழ்வார்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. நேற்று தி.ஊரணி கைலாச விநாயகர், இறகுசேரி மந்திர மூர்த்தி விநாயகர் மணி முத்தாறு ஆற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !