உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகால பூஜை

வேணுகோபால சுவாமி கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகால பூஜை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது. வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் என அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் காலை 4 மணி முதல் 10:30 மணி வரை பெருமாள் கோவிலில் 27 முறை வலம் வந்து வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இன்று விஷ்ணுபதி புண்ணிய காலமான கார்த்திகை 1 ம் தேதியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வேணுகோபால சுவாமி கோவிலில் 27 முறை வலம் வந்து சுவாமியை வழிபட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !