உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்... சரண கோஷத்துடன் மாலை அணிந்து விரதம் துவங்கினர்

மதுரையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்... சரண கோஷத்துடன் மாலை அணிந்து விரதம் துவங்கினர்

மதுரை: கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, மதுரையில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சரண கோஷம் முழங்க மாலை அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்கினர்.


சபரிமலை ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் மாலை அணிந்து 48 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொள்வது வழக்கம். பின்னர் இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். அந்த வகையில், மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள ஆனந்த ஐயப்பன் கோவிலில் இன்று அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்கி வைத்தனர். இதையொட்டி, அதிகாலை முதலே ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஐயப்ப சரண கோஷம் எழுப்பி வழிபட்டனர். குறிப்பாக, முதன்முறையாக மாலை அணியும் கன்னிசாமிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் விரதத்தைத் தொடங்கினர். குழந்தைகளும் மாலை அணிந்து ஐயப்பனை வழிபட்டு தங்களது விரதப் பயணத்தைத் தொடங்கினர். இதனால் ஆனந்த ஐயப்பன் கோவில் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !