உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹைதராபாத் கோடி தீபோத்ஸவம் துவக்கம்: பஞ்ச ஆரத்தி கண்டு பக்தர்கள் பரவசம்

ஹைதராபாத் கோடி தீபோத்ஸவம் துவக்கம்: பஞ்ச ஆரத்தி கண்டு பக்தர்கள் பரவசம்

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடி தீபோத்ஸவம் இந்த ஆண்டு 17 நாட்கள் நடைபெறும் வகையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. விழாவின் முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, 108 பக்தர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான பஞ்ச ஆரத்தி நடைபெற்றது. அப்போது தங்க நிறத்தில் ஜொலித்த சிவலிங்கத்தின் முன்பு, உயர்ந்து எழுந்த தீபச் சுடர்களுக்கு மத்தியில் பக்தர்கள் சிவபெருமானுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இந்தக் கண்கொள்ளாக் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பாரம்பரிய வழிபாட்டு முறைகள், பக்தி மற்றும் ஆன்மிக உணர்வுடன் தொடங்கிய கோடி தீபோத்ஸவம், ஹைதராபாத் நகரையே பக்தி ஒளியில் மிளிரச் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !