உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக ஆராதனை

தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக ஆராதனை

வெள்ளகோவில்: வெள்ளகோவில், சோளீஸ்வரஸ்வாமி கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவர்க்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை விழா நடந்தது. தைமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு நேற்று மாலை திருமஞ்சனம், பச்சரிசி மாவு, பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், உட்பட 32 திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கால பைரவர் வழிபாட்டு குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !