அயோத்திக்கு செல்கிறது ராமேஸ்வரம் மண்
ADDED :2083 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடல் மணலுடன், ஹிந்து முன்னணியினர், அயோத்திக்கு சைக்கிளில் புறப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த ஹிந்து முன்னணி நிர்வாகிகள், ஜெயகுமார், 45, முருகன், 50, கோபாலகிருஷ்ணன், 27. இவர்கள் மூவரும், நாட்டில் அமைதி வேண்டியும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை துரிதப்படுத்த வலியுறுத்தியும், 2400 கி.மீ., துாரமுள்ள அயோத்திக்கு நேற்று, சைக்கிளில் புறப்பட்டனர். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில், ஒரு கைபிடி மணல் எடுத்து, பயணத்தை துவக்கினர். ஒரு நாளைக்கு, 40 - 50 கி.மீ., பயணம் செய்து வாரணாசி, காசி வழியாக, 70 நாட்களில் அயோத்திக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக, தெரிவித்தனர்.