ஹயக்கிரீவர் கோவிலில் மாணவர்களுக்கு வழிபாடு
ADDED :2185 days ago
உடுமலை: உடுமலை, சீனிவாச பெருமாள் கோவிலில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு வழிபாடு நடந்தது.
உடுமலை, பெரியகடை வீதியிலுள்ள பூமிநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. அதிகாலையில், பெருமாளுக்கு, ேஹாமம் நடந்தது. மாணவர்களின் பெயர்கள் மற்றும் தேர்வு எண்களை வைத்து அர்ச்சனை செய்யப்பட்டது.சிறப்பு அலங்காரத்துடன் உள்ள பெருமாளுக்கு தீபாராதனை நடந்தது. ஹயக்கிரீவர் சுவாமிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்தது. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பள்ளி மாணவர்கள் பூஜையில் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பேனா, இனிப்பு, மற்றும் ஹயக்கிரீவர் புகைப்படங்கள் வழங்கப்பட்டன.