கஞ்சத்தனம் செய்யாதீர்!
                              ADDED :2110 days ago 
                            
                          
                           ஒருமுறை நாயகம் அவரது பணக்கார நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றார். அப்போது அவர் தரமற்ற  ஆடைகளை அணிந்திருந்தார். “நீர் பணக்காரர் தானே?” எனக் கேட்டார். அவர். “ஆம்! இறைவன் எனக்கு ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள் என நிறைய செல்வம் தந்துள்ளான்,” என்றார்.
 ‘‘உமக்கு இவ்வளவு செல்வங்களைக் கொடுத்திருந்தும், இறையருளின் அடையாளம் உமது உடலில் வெளிப்பட்டிருக்க வேண்டாமா?’’ எனக் கேட்டார். அதாவது இறைவன் வழங்கியதை அனுபவிக்கவும் தெரிய வேண்டும். கஞ்சத்தனமாக பணத்தைச் சேர்ப்பது இறைவன் செய்த நன்றியை மறப்பதற்கு சமம்.