நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல்
ADDED :2128 days ago
சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் நகரத்தாரின் செவ்வாய் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது.
இப்பகுதி நகரத்தார் தை முதல் செவ்வாயன்று இங்குள்ள கண்ணுடைய நாயகியம்மன் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.இந்தாண்டு பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வெளியூர்களில் வசிக்கும் நகரத்தார் நாட்டரசன்கோட்டை வந்தனர். இந்த ஆண்டு முதல் நபராக பொங்கல் வைக்க திருவுளச்சீட்டு முறையில் திருஞானசம்பந்த மூர்த்தி குடும்பத்தார் தேர்வு செய்யப்பட்டனர். மாலை 5:00 மணிக்கு கோயில் முன்பு அவர்கள் பெரிய மண்பானையில் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து 912 நகரத்தார்கள் மற்றும் மற்ற சமூகத்தினரும் பொங்கல் வைத்தனர். விழாவில் பெல்ஜிய சுற்றுலா பயணிகள் சிலரும் பங்கேற்றனர்.