திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :1 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் யோகநிலையில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
அஷ்டபைரவத் தலங்களில் சிரசாக இத்தலத்தை பக்தர்கள் வழிபடுகின்றனர். இங்கு அஷ்டமி தினங்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று மதியம் 12:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர் யோகபைரவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பைரவர் எழுந்தருள அலங்காரத் தீபாராதனை நடந்தது.