விருத்தாசலம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா
விருத்தாசலம்: திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் அடுத்த ஊ.பொன்னாலகரம், ஊ.கொம்பாடிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில், 154வது ஆண்டு மாசிமாத தீமிதி திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. மேலும், இரவு 7:00 மணியளவில் பீஷ்மர் பிறப்பு, தர்மர் பிறப்பு, அம்மன் பிறப்பு உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு மேல், குளக்கரையில் இருந்து சக்தி கரகம் சுமந்து ஊர்வலமாக வரப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக தீக்குண்டத்தில் கிடாவெட்டி அம்மனுக்கு பலியிடப்பட்டது. ஊ.பொன்னாலகரம், ஊ.கொம்பாடிக்குப்பம் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.