உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் விமரிசை

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் விமரிசை

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. காஞ்சிபுரம் காமாட்சியமமன் கோவில் மாசி பிரம்மோத்சவத்தையொட்டி, காஞ்சி காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன அறக்கட்டளை சார்பில், காஞ்சிபுரம் ரயில்வே சாலை, பரஞ்ஜோதி அம்மன் கோவிலில் இருந்து, பால்குட ஊர்வலம் நடந்தது.இதில், திரளான பெண்கள் பால்குடங்களை சுமந்தபடி முக்கிய வீதி வழியாக காமாட்சியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம், மஹா தீப ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !