உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி விநாயகப் பெருமானுக்கு அருகம்புல்,ரோஜா, மல்லிகை, உள்ளிட்ட பல பூமாலைகள் செலுத்தபட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதைப் போலவே வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவில், அய்யாபட்டி மாணிக்க விநாயகர் கோவில்,கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் விநாயகர், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோவிலில் உள்ள வலம்புரி விநாயகர் சன்னதிகளிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !