ஆண்டாவூரணி மிக்கேல் அதிதுாதர் சர்ச் திருவிழா தேர்பவனி
திருவாடானை: திருவாடானை அருகே ஆண்டாவூரணி மிக்கேல் அதிதுாதர் சர்ச் திருவிழா தேர்பவனி நடந்தது. திருவாடானை அருகே சிவகங்கை மறை மாவட்டத்தை சேர்ந்த ஆண்டாவூரணி மிக்கேல் அதிதுாதர் சர்ச் திருவிழா செப்.,20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் போது நவ நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலையும், மிக்கேல் அதிதுாதரின் மன்றாட்டு மாலையும் நவநாள் திருப்பலியும், மறையுரையும் நடந்தது. நேற்று திருவிழா திருப்பலியில் அதிதுாதரின் பராமரிப்பும், பாதுகாவலும் என்ற தலைப்பில் மறைமாவட்ட பொருளாளர் ஆரோக்கியசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்டது. 15க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவும், நேற்று மாலையும் தேர்பவனி நடந்தது. முன்னதாக பாதிரியார் பாஸ்டின், உதவி பாதிரியார் ஸ்டீபன் பீட்டர் முன்னிலையில் திருப்பலி நடந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த தேர்பவனியில் மிக்கேல் அதிதுாதர், இஞ்ஞாசியார், சவேரியார், சூசையப்பர், அடைக்கல அன்னை ஆகிய தேர்கள் வலம் வந்தன.