வடமதுரை காளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :211 days ago
வடமதுரை; வடமதுரை காளியம்மன் கோயிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் வருடாபிஷேக விழா நடந்தது. மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக ஏழுமலையான் கோயில் சென்று பின்னர் 4 ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். கோயில் வளாகத்தில் பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் குழுவினர் யாக சாலை பூஜைகளை நடத்தினர். அலங்கார ரதத்தில் அம்மன் ஊர்வலமும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை தக்கார் முத்துலட்சுமி, கோயில் சேவார்த்திகள் செய்திருந்தனர்