உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழா; மஞ்சள் காப்பு தயாரிக்கும் பணி தீவிரம்

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழா; மஞ்சள் காப்பு தயாரிக்கும் பணி தீவிரம்

காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழாவையொட்டி, பக்தர்கள் மஞ்சள் காப்பு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இதில் லட்சக்கண பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இவ்வாண்டு மார்ச் 10ம் தேதி காலை 5.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. சாலை 6.30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்குவர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மார்ச் 17ம் தேதி கோயில் கரகம், மது முளைப்பாரி நடைபெறுகிறது. முக்கிய திருவிழாவான பால்குடத் திருவிழா மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மார்ச் 18 காலை நடைபெறுகிறது. மாலையில் கோயில் கரகம் பருப்பூரணியில் சேர்த்தல் நிகழ்ச்சியும் இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் 19 அம்மன் திருவீதி உலாவும், மார்ச் 20 சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. இந்நிலையில், பக்தர்கள் காப்பு கட்டுவதற்காக காப்பு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 ஆயிரம் எண்ணிக்கையிலான மஞ்சள் காப்பு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !