உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவகிரகங்களின் தேர்!

நவகிரகங்களின் தேர்!

சூரியனின் தேர் ஒன்பதாயிரம் யோஜனை உயரமுள்ளது. குதிரைகள் பூட்டிய தண்டின் நீளம் அதற்கு இருமடங்கு அளவுடையது. பொன்னாலானது. ஒரே ஒரு சக்கரமும், மூன்று இருசுகளுமிருக்கும். சிவப்பு நிறமுள்ள ஏழு குதிரைகள் இதை இழுக்கின்றன.

சந்திரனின் தங்கத்தேருக்கு மூன்று சக்கரங்கள் இருக்கும். இத்தேரை பால் நிறக்குதிரைகள்  இழுத்துச் செல்கின்றன. செவ்வண்ண உடையணிந்து செஞ்சந்தனம் பூண்டு, எட்டுக்  குதிரைகள் பூட்டிய பொன் தேரில், மேருவை வலம் வருகிறார் செவ்வாய்.

புதனுடைய மணித்தேரை எட்டுக் குதிரைகள் இழுத்துச் செல்கின்றன. வியாழனின் ரதம்,  பசும் பொன்நிறத்தில் காட்சியளிக்கும். இத்தேரினை பொன்னிறமுள்ள எட்டுக்  குதிரைகள் இழுத்துச் செல்லும். வெள்ளியைப் போல் ஒளி வீசும் சுக்ரனின் ரதத்தை  வெண்ணிறமுள்ள பத்துக் குதிரைகள் இழுத்துச் செல்லும்.

இரும்பாலான சனிபகவானின் தேரை கறுப்பு நிறக்குதிரை மிக மெதுவாக இழுத்துச் செல்லும். ராகுவின் தேர், வண்டின் நிறமுடையது. இதனை சாம்பல் நிறமுள்ள எட்டுக்குதிரைகள் இழுத்துச் செல்கின்றன.

சிவப்பு நிறமும் புள்ளிகளுமுடைய தேர் கேதுவின் ரதம்,  இதனை புகை நிறம் கொண்ட எட்டுக் குதிரைகள் இழுத்து வருகின்றன.

நவகிரகங்களின் தேர்களையும் எண்ணற்ற நட்சத்திரங்களையும் வாயுவாகிய கயிறால் இணைத்து துருவன் இயக்குவதாக லிங்க புராணம் சொல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !