வீரராகவர் கோவிலில் கொடியேற்றம்
ADDED :2080 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், நேற்று, காலை, 5:00 மணியளவில், கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, தங்கச் சப்பரத்திலும், இரவு, சிம்ம வாகனத்திலும், உற்சவர் வீரராகவர் எழுந்தருளினார்.இன்று, காலை, ஹம்ஸ வாகனம், இரவு, சூரிய பிரபை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, கருடச் சேவை, கோபுரத் தரிசனம், நாளை, 23ம் தேதி காலை நடக்கிறது. வரும், 24ம் தேதி, தை அமாவாசையை முன்னிட்டு, ரத்னாங்கி சேவை, யாளி வாகனத்தில் உற்சவர் எழுந்தருள உள்ளார். வரும், 28ம் தேதி, குதிரை வாகனம், 30ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.