மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
2081 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
2081 days ago
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான இடத்தை வருவாய்த் துறையினர் அளவீடு செய்து வரையறை செய்தனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., குமரகுரு, முயற்சியால் உளுந்துார்பேட்டையில், திருப்பதி தேவஸ்தான போர்டு சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவில் கட்டுவதற்கான உளுந்துார்பேட்டையில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அதில், திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமையில் திருப்பதி தேவஸ்தானம் கோவில் நிர்வாகிகள் 6 பேர் உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே கோவில் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவில் கட்டுவதற்கான இடத்தை அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது. வருவாய்த்துறை தலைமை சர்வேயர் ரஜினிகாந்த், குறுவட்ட சர்வேயர் உமா மகேஸ்வரி தலைமையில் வருவாய் ஆய்வாளர் செங்குட்டுவன், வி.ஏ.ஓ., கோபால், கிராம உதவியாளர்கள் ராமசாமி, ஏழுமலை, பால்ராஜ், நாகராஜ், முருகன், அருண்ராஜ், ஜோதிலிங்கம், உள்ளிட்டோர் இடத்தை அளவீடு செய்து வரையறை செய்தனர்.
2081 days ago
2081 days ago