புதுச்சேரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷம்
ADDED :8 hours ago
புதுச்சேரி: மேரி உழவர்கரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மூலக்குளம் – மேட்டுப்பாளையம் சாலை மேரி உழவர்கரையில் வரலாற்று பிரசித்திப்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.
பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை நந்தி பகாவானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது, சிவனடியார்கள் திருவாசகம் பாடி வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து சுந்தரேஸ்வரர் மற்றும் நந்தி பகாவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.