உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நயினார்கோவிலில் முளைப்பாரி விழா: மழை வேண்டி பிரார்த்தனை

நயினார்கோவிலில் முளைப்பாரி விழா: மழை வேண்டி பிரார்த்தனை

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் மாகாளியம்மன் கோயில் முளைப்பாரி விழா நடந்தது.


நயினார்கோவிலில் மருதவனம் மாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி வெள்ளிக்கிழமைகள் உட்பட வருடம் முழுவதும் விழாக்கள் நடக்கிறது. தொடர்ந்து முளைப்பாரி விழாவையொட்டி தினமும் ஆண்கள், பெண்கள் ஒயிலாட்டம், கும்மி அடித்தும் கொண்டாடினர். அப்போது கிராம மக்கள் மழை வேண்டி அம்மனை பிரார்த்தித்து முளைப்பாரிகளை சுமந்து சென்றனர். இதேபோல் பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த பல்வேறு கோயில்களில் முளைப்பாரி விழா கோலாகலமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !