வால்பாறை கோவில்களில் புரட்டாசி கிருத்திகை சிறப்பு பூஜை
ADDED :1 days ago
வால்பாறை: சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த புரட்டாசி மாத கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புரட்டாசி மாதம் கிருத்திகை நாளான நேற்று, வால்பாறை நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு பால், இளநீர், பன்னீர், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி கிருத்திகை பூஜையையொட்டி நேற்று காலை சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.