உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் நவராத்திரி விழா அக்.11ல் துவக்கம்

பழநி முருகன் கோயிலில் நவராத்திரி விழா அக்.11ல் துவக்கம்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நாளை மறுதினம் அக்.11ல் நவராத்திரி விழா துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு தங்கரத புறப்பாடு நாளை முதல் அக்.20 வரை நிறுத்தப்பட உள்ளது.


பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் அக்.11ல் நவராத்திரி விழா பூஜையில் காப்பு கட்டுதல் உடன் துவங்க உள்ளது. பழநி முருகன் கோயிலில் உச்சிக்கால பூஜையில் காப்பு கட்டுதல் நடக்கும். விழா நாட்களில் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். நவராத்திரி விழா நாட்களில் பக்தி இசை, சொற்பொழிவு, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெறும். தொடர்ந்து நவராத்திரி நாட்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெறும். பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், ஆகியவை நடக்கும். அக்.,20ல் முருகன் கோயிலில் மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மதியம் 2:45 மணிக்கு மேல் பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலை அடையும். தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு கோதைமங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்வு நடைபெறும். அம்பு போடுதல் நிகழ்வுக்கு பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைந்து, பராசக்தி வேல் முருகன் கோயில் அடைந்த பின் அர்த்தசாம பூஜை நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு அக்.11., முதல் அக்.20., வரை நவராத்திரி விழா நாட்களில் முருகன் கோயில் தங்கரத புறப்பாடு பத்து நாட்களுக்கு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !