/
கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் ஆனம்.ராமநாராயண ரெட்டி சாமி தரிசனம்
காளஹஸ்தி சிவன் கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் ஆனம்.ராமநாராயண ரெட்டி சாமி தரிசனம்
ADDED :12 minutes ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் மாநில அறநிலையத் துறை அமைச்சர் ஆனம்.ராமநாராயண ரெட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர் கோயிலுக்குள் சென்றவர்கள் ஞானபிரசூனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்திஷ்வரரை மூலவர் சன்னதியில் சிறப்பு தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர் மேலும் கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு வேத ஆசிர்வாதங்களையும் செய்தனர்.