ஸ்ரீபட்டத்தரசியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு
ADDED :1 days ago
திருப்பூர்: மங்கலம் அருகே அக்ஹாரப்புத்துாரிலுள்ள ஸ்ரீபட்டத்தரசி அம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. கடந்த 17ம் தேதி, திருப்பணிகள் முடிந்து, சாந்த விநாயகர், பட்டத்தரசி, கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, தினமும் மண்டல அபிஷேக பூஜையும், அன்னதானமும் நடந்து வந்தது. நேற்று, மலைக்கோவில் சிவாச்சார்யார்கள் சிறப்பு யாகபூஜை நடத்தி, நந்தா தீபத்தை நிறைவு செய்தனர்.