உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி கோயில் பிரசாதத்திற்கு பாதுகாப்பு தரச்சான்று

மீனாட்சி கோயில் பிரசாதத்திற்கு பாதுகாப்பு தரச்சான்று

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதங்களுக்கு உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறை கடவுளுக்கு சுகாதாரமான காணிக்கை - ஹோக் என்ற தரச்சான்று வழங்கவுள்ளது. ஹிந்து கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் சுகாதாரமானதா, பாதுகாப்பானதா என உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. 100 சதவீதம் தரம், சுகாதாரம், பாதுகாப்பு பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட்டால் கோயில் பிரசாதங்களுக்கு கடவுளுக்கு சுகாதாரமான காணிக்கை என்ற தரச்சான்று வழங்க ஏற்பாடுகளை செய்கிறது. முதற்கட்டமாக மீனாட்சி அம்மன் கோயில் உட்பட அறநிலையத்துறையின் 45 கோயில் பிரசாதங்களுக்கு இந்த ஹோக் சான்று வழங்கப்படவுள்ளது.மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: பிரசாதம் தயாரிப்பில் அக்மார்க் தர முத்திரை பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சுகாதாரம், பாதுகாப்பு பின்பற்றப்படுகிறது. அப்பம், முறுக்கு, அதிரசம், லட்டு பிரசாதங்களுக்கு தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தரச்சான்று வழங்கியுள்ளது. சமீபத்தில் டில்லியில் நடந்த உணவு பொருள் கண்காட்சியில் பிரசாதங்களுக்கு தரச்சான்று கிடைத்துள்ளது. தற்போது ஹோக் சான்று கிடைப்பது வரவேற்கத்தக்கது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !