ஷீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேக விழா
ADDED :2082 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள ஷீரடி சாய் பாபா கோயிலில் வருஷாபிஷேக விழா இரண்டு நாள் நடந்தது. முதல் நாள் காலை ஏ.எஸ். வேலாயுதராஜா வேதாந்த பாடசாலை மற்றும் சேக்கிழார் அறக்கட்டளை சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. அன்று இரவு பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.நேற்று இரண்டாம் கால பூஜையுடன் கலசாபிஷேகம் ம, சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11 :00மணிக்கு பக்தர்கள் கரங்களால் சாயீ சகஸ்வர நாமம் அர்ச்சனை செய்து புஷ்பம் சமர்ப்பிக்கப்பட்டது.சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஷீரடி சாயி பாபா கோயில் சேவா சமிதி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.