திருநள்ளாரில் பக்தர்கள் கூட்டம்
ADDED :2082 days ago
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நேற்று சனிப்பெயர்ச்சி. சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார். அதனையொட்டி, திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலையில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனி பகவான் வரும் டிசம்பர் 27ம் தேதி காலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார்.