கல்லலில் இன்று மாசி தேரோட்டம்
ADDED :54 minutes ago
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மாசிமகத் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இவ்வாண்டு திருவிழா பிப்.21 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், பூத, சிம்ம, காமதேனு, குதிரை உட்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
நேற்று திருக் கல்யாணமும், குன்னமாகாளி அம்மன் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 8:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் தேருக்கு சுவாமி எழுந்தருளல், மாலை 4:00 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நடைபெறுகிறது. நாளை தீர்த்தவாரி, சப்தாவரணம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.